சினிமா நடிகரை திருமணம் செய்ய மாட்டேன்: டாப்சி

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஆடுகளம்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ் படவுலகில் பிரபலமானவர் டாப்சி. ‘வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா-2, வைராஜா வை’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

டாப்சிக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும் பெற்றோர் மாப்பிள்ளை பார்ப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு பதில் அளித்து டாப்சி அளித்த பேட்டி வருமாறு:-

நான் திருமணத்துக்கு இன்னும் தயாராகவில்லை. ஆனாலும் எனக்கு மாப்பிள்ளையாக எப்படிப்பட்டவர் வரவேண்டும் என்று மனதுக்குள் சில ஆசைகளை வைத்துள்ளேன். என்னை கவுரவப்படுத்துபவராக அவர் இருக்க வேண்டும். என்னுடைய சுதந்திரத்துக்கு பங்கம் வரும்படி நடக்க கூடாது. எந்த விஷயத்துக்காகவும் என்னிடம் கேள்வி கேட்க கூடாது. நச்சரிக்கவும் கூடாது. நான் பிடித்தமாதிரி வாழ்வதற்கு முழு உரிமை அளிக்க வேண்டும். எதற்கும் தடை போடக்கூடாது.

எதிலும் நானே சுயமாக முடிவு எடுக்க அனுமதிக்க வேண்டும். நடிகரை திருமணம் செய்து கொள்ளமாட்டேன். சினிமா தொழிலில் சம்பந்தப்பட்ட யாரையும் மணக்கமாட்டேன். திருமணத்துக்கு பிறகும் எனது குடும்பத்தில் ஒரு சினிமா நட்சத்திரம் தான் இருக்க வேண்டும். அது நானாகவே இருக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் படித்தபோது துடுக்குத்தனமான பெண்ணாக இருந்தேன். அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்கமாட்டேன். காலை 7 மணிக்கு வீட்டை விட்டு வெளியே போனால் இரவு 10 மணிக்குத்தான் திரும்புவேன்.

கிராமங்களில் நடப்பதுபோன்ற தெரு விளையாட்டுகளில் நான் தான் கில்லி. நிறைய பரிசுகள் வாங்கி இருக்கிறேன். அப்போதெல்லாம் ஆண் பசங்களை அவர்களின் பெற்றோர் என்னிடம் நெருங்க விட மாட்டார்கள். என்னை பார்த்து ‘அதோ போறாளே அந்த பெண் ஒருமாதிரி பட்டவள். அவளிடத்தில் பேசக்கூடாது’ என்று வாலிப பசங்களை அவர்களின் பெற்றோர் கண்டிப்பார்கள். ஆனால் அந்த பெற்றோர் இப்போது என்னை அழைத்து எங்கள் பசங்களுக்கு கொஞ்சம் புத்திமதி சொல்லும்மா என்கிறார்கள்.

இது எனக்கு கிடைத்த வெற்றி. சினிமா நடிகையாவேன் என்று கனவிலும் நான் நினைக்கவில்லை. நடனத்தில் ஈடுபாடு இருந்ததால் அதை கற்றேன். பிறகு கைச்செலவுக்காக மாடலிங் செய்தேன். அதுவே எனக்கு சினிமா வாய்ப்பை பெற்று தந்தது. எனது சினிமா பயணம் தற்போது நன்றாக போய்க்கொண்டு இருக்கிறது. சகோதரியுடன் இணைந்து திருமணங்களை பொறுப்பேற்று நடத்திக்கொடுக்கும் தொழிலையும் செய்து வருகிறேன். இதை வைத்து சினிமாவை விட்டு நான் விலக போவதாக செய்திகள் பரவி உள்ளன. சினிமாவை விட்டு ஒருபோதும் நான் விலக மாட்டேன்.

இவ்வாறு டாப்சி கூறினார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*