விளையாட்டுதுறை அமைச்சர் கிளிநொச்சிக்கு விஜயம்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர நேற்று செவ்வர்க்கிழமை கிளிநொச்சிக்கு விஜயம் செய்தார்.

கிளிநோச்சியில் அமைக்கப்பட்டு வரும் சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானத்தை பார்வையிடும் நோக்கிலேயே விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவின் விஜயம் அமைந்துள்ளது.

குறிதத் விளையாட்டு மைதானத்தை பார்வையிட்ட அமைச்சர் நிருமாணப்பணிகள் தொடர்பில் அதிகாரிகளிடம் விளக்கங்களை கேட்டறிந்துகொண்டார்.

ஏதிர்வரும் 2016ஆம் ஆண்டு தேசிய விளையாட்டு விழாவை கிளிநொச்சியில் நடாத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு யூலை மாதம் 20 ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் அடிக்கல் நாட்டப்பட்டு இரண்டு வருடங்களுக்குள் பூர்த்தி செய்யப்பட்டு தேசிய விளையாட்டு விழா நடாத்தப்படும் எனக் கூறப்பட்டிருந்தது.

எனினும் ஒப்பந்த நிறுவனத்தின் பணிகளுக்கான நிதி விடுவிப்பு முறையாக இடம்பெறாமையினால் கடந்த பல மாதங்களாக கட்டுமானப்பணிகள் எவையும் இடம்பெறாது இருந்த நிலையில் தற்போது மீண்டும் மந்த கதியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் தற்போது இதற்குரிய நிதியை விடுப்பு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து தடையின்றி மைதான நிருமாணப் பணிகள் முன்னெடுக்கப்படும்.

ஆத்துடன் எதிர்வரும் 2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்திற்குள் மைதான நிருமாணப்பணிகள் நிறைவடைந்துவிடும் எனவும் அமைச்சர் இதன்போது மேலும் குறிப்பிட்டார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit