பாதுகாப்பிற்காகவே நிலக்கீழ் மாளிகை அமைக்கப்பட்டது கோட்டபாய ராஜபக்ஷ

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

பாதுகாப்பு தேவைகளின் அவசியம் காரணமாகவே ஜனாதிபதி மாளிகையின் கீழ் நிலக்கீழ் மாளிகை அமைக்கப்பட்டது என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு கோட்டே ஜனாதிபதி மாளிகையின் கீழ் நிலகீழ்மாளிகை அமைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த மாளிகையானது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தனிப்பட்ட தேவைக்காக நிர்மானிக்கப்படவில்லை எனவும்,

தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்காகவே 2009ம் ஆண்டு அமைக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பாதுகாப்புச் சபை மற்றும் படைத் தளபதிகளுக்கு அறிவித்த பின்னரே இந்த மாளிகை நிர்மானிக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

களனி திஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானப் படையினர் தாக்குதல் மேற்கொண்டனர்.

அந்த தாக்குதல்; ஜனாதிபதி மாளிகையை இலக்கு வைத்தே மேற்கொள்ளப்படவிருந்தது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த மாளிகை தொடர்பில் சில தரப்பினர் சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை எனவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit