கே.பிக்கு எதிராக நான்கு அறிக்கைகள்

பிறப்பு : - இறப்பு :

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளர் கே. பி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதனுக்கு எதிராக சட்டமா அதிபர் நான்கு அறிக்கைகளை தாக்கல் செய்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சார செயலாளர் விஜித்த ஹேரத்தினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த நான்கு அறிக்கைகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதனையடுத்து குறித்த வழக்கு விசாரணைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 12 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, குமரன் பத்மநாதனை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும், என வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனுவில்,

ஆயுத கொள்முதல் மற்றும் பண மோசடி ஆகியன உள்ளிட்ட 193 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு கடந்த ஜனவரி மாதம் குறித்த மனு தாக்கல்செய்யப்பட்டது.

இந்நிலையில் குறித்த மனு மீதான வழக்கு கடந்த ஒகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது,

கே.பிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு தேவையான எந்தவொரு ஆதாரங்களும் கிடைக்கப் பெறவில்லையென சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் தெரிவித்ததையடுத்து வழக்கு இன்று வரை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நான்கு அறிக்கைகள் சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit