விமல் வீரவன்சவின் கடவுச் சீட்டு மீண்டும் ஒப்படைப்பு

பிறப்பு : - இறப்பு :

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் கடவுச் சீட்டு மீண்டும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய விமல் வீரவங்சவின் புதிய கடவுச்சீட்டை ஒரு இலட்சம் ரூபா பிணை அடிப்படையில் விடுவிக்குமாறு நீர்கொழும்பு மேலதிக நீதவான் திலகரத்ன பண்டார உத்தரவிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில், குறித்த இராஜதந்திர கடவுச்சீட்டின் மூலம் அவருக்கு வெளிநாடு செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலவதியான கடவுச் சீட்டை பயன்படுத்தி வெளிநாடு செல்ல முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கடந்த வெள்ளிக்கிழமை குற்றப் புலனாய்வு பிரிவினால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கைது; செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட அவர் 10 ஆயிரம் ரூபா ரொக்க பிணையிலும் 10 லட்சம் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்மை குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit