பங்களாதேஷ்ற்கும் இலங்கைக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

பங்களாதேஷ்ற்கும் இலங்கைக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளதாக அந்நாட்டின் வர்த்தக அமைச்சர் டொபைல் அஹமட் தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் யசோஜா குணசேகரவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் டொபைல் அஹமட் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தம் குறித்த அனைத்து நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளதாகவும்,

எனினும் இந்த உடன்படிக்கையை கைச்சாத்திடுவதில் சில ஏற்றுமதி வரிச்சிக்கல்கள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரு நாடுகளும் இடையிலான வர்த்தகத்தை விஸ்தரிக்கும் வகையில் ஏற்றுமதி வரியை 13.5 வீதத்திலிருந்து 5 வீதமாக குறைக்குமாறு தான் பரிந்துரை செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் இருநாடுகளும் இது குறித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பங்களாதேஷ் 2014 – 2015ஆம் நிதியாண்டில் இலங்கைக்கு, 26.8 மில்லியன் டொலர் பெறுமதியான ஏற்றுமதியினை மேற்கொண்டுள்ளதோடு,

66.65 மில்லியன் டொலர் இறக்குமதியினை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit