கச்சத்தீவு விவகாரத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும்: டி.ராஜா

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

இலங்கைக்கு கச்சதீவு தாரைவார்க்கப்பட்ட விடயத்தை மீளாய்வு செய்யுமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா எம்.பி. தெரிவித்துள்ளார்.

சென்னையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர்கள் மீது இலங்கை இராணுவத்தினர் தொடர்ந்தும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

எல்லை தாண்டுவோர் மீது பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குத்தாக்கல் செய்வது, சர்வதேச சட்டத்திற்கு எதிரானது எனவும்,

கச்சத்தீவை தாரைவார்த்தமையே இதற்கு காரணம் எனவும் குறிப்பிட்ட அவர்,

இது தொடர்பில் இந்திய அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டுமெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எல்லை தாண்டும் மீனவர்களுக்கு 15 கோடி ரூபா அபராதம் விதிக்கும் திட்டம் அநியாயம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்திய மீனவர் பிரச்சினையில் மத்திய அரசு அக்கறை காட்டுவதில்லை எனவும், தமிழக அரசு நிறைவேற்றுகின்ற தீர்மானங்களை மதிப்பதில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

திருகோணமலையில் இந்திய இலங்கை இராணுவ கூட்டுப்பயிற்சி முகாம் நடைபெறுவதாகவும், இது எதற்காக எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit