மீரியபெத்தை மண்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி

பிறப்பு : - இறப்பு :

மீரியபெத்தை மண்சரிவில் உயிரிழந்த 37 பேரின் ஆத்மசாந்திக்காக மலையக மக்கள் அனைவரையும் சுடரேற்றி பூஜை வழிபாடுகளில் ஈடுபடுவதுடன் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளுமாறு ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஆ.முத்துலிங்கம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மீரியபெத்தயில் மண் சரிவு ஏற்பட்டு நாளையுடன் ஒருவருடம் பூர்த்தியாகின்ற நிலையில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை வீடுகள் நிர்மாணித்து கொடுக்கப்படவில்லை.

அவர்கள் தொடர்ந்தும் தேயிலை தொழிற்சாலையிலேயே வாழ்ந்து வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு மூன்று மாதங்களில் வீடுகள் கட்டித் தரப்படும் என்று, மலையக அமைச்சர்கள் பலர் சூளுரைத்து வீடமைப்புக்கான அடிக்கற்களை நாட்டிவைத்தனர்.

எனினும் வீடமைப்பு திட்டம் நிறைவுபெறவில்லை. இதனால் அரசாங்கம் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியே நாளை கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit