சூளைமேடு கொலைச் தொடர்பில் சாட்சியளிக்க டக்ளஸ் தேவானந்தா தீர்மானம்.

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

1987ம் ஆண்டு தமிழகத்தின் சூளைமேடு இல் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பான வழ்கு விசாரணைகளில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வீடியோ கொன்பிரன்ஸ் தொழில்நுட்பத்தின் சாட்சியமளிக்கவுள்ளார்.

அவர் இலங்கையிலிருந்தே இந்த வழக்கு விசாரணைகளில் சாட்சியமிளக்கவுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சென்னை நீதிமன்றில் இந்த விசாரணை நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

1987ம் ஆண்டு தீபாவளி பண்டிகையன்று சென்னை சூளைமேடு பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்திருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் டக்ளஸ் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

அத்துடன் நீதிமன்ற விசாரணைகளுக்கு பங்கேற்காத காரணத்தினால் டக்ளஸ் தேவானந்தாவிற்கு பிணையில்லா பிடிவிராந்து உத்தரவினை இந்திய நீதிமன்றம் பிறப்பித்திருந்தது.

இந்நிலையில் இலங்கையில் அமைச்சுப் பதவியை பெற்றுக் கொண்டதன் பின்னர் ராஜதந்திர வரப்பிரதாசங்களுடன் இந்தியா பயணம் செய்த போது, அவரை இந்திய பொலிஸார் கைது செய்யவில்லை.

இதனையடுத்தே இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் சாட்சியமளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும்,

இது தொடர்பில் தனது சட்டத்தரணியுடன் கலந்துரையாடி வருவதாகவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302