குடிகாரர்களை கண்டாலே எனக்கு பிடிக்காது: இலியானா

பிறப்பு : - இறப்பு :

‘நண்பன்’ படத்தில் விஜய் ஜோடியாக நடித்தவர் இலியானா. தெலுங்கு, இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆண்ட்ரூ என்பவரை இலியானா காதலிப்பதாக கிசுகிசுக்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து இலியானா அளித்த பேட்டி வருமாறு:-

‘‘என்னைப்பற்றி நிறைய வதந்திகள் பரவி வருகின்றன. அதற்கெல்லாம் நான் பதில் சொல்ல விரும்பவில்லை. என் சொந்த வாழ்க்கை பற்றி மற்றவர்கள் பேசுவது எனக்கு பிடிக்காது. நான் எப்படி இருக்கவேண்டும் என்று எனக்கு பிடிக்கிறதோ, அப்படி இருப்பேன். பாராட்டுக்களை நான் விரும்புவது இல்லை. மற்றவர்கள் ஆலோசனைகள் வழங்குவதையும் வெறுக்கிறேன்.

நான் நடிகை என்பதற்காக 24 மணி நேரமும் கேமரா முன்னால் இருக்க முடியாது. ரசிகர்களை திருப்திபடுத்துவதற்காக மட்டுமே என் முழு வாழ்க்கையும் இல்லை. கேமராவை விட்டு வெளியே வந்ததும் நான் சாதாரண பெண்தான். அப்போது என்னைப்பற்றித்தான் சிந்திப்பேன். என்னைப்பற்றி தவறாக வதந்திகள் பரப்புவதை பார்த்து நான் கவலைப்படுவது இல்லை.

எனது குண நலன்களை மற்றவர்களுக்காக மாற்றிக்கொள்ளவும் மாட்டேன். நான் ஒரு பெண்ணாக மட்டும் இல்லை. என் உடம்புக்குள் பல ஆண்களை நுழைத்து வைத்த மாதிரி தைரியமான பெண்ணாகவே இருப்பேன். எனக்கு மது அருந்தும் குடிகாரர்களை பிடிக்காது. குடிகாரர்களின் பக்கத்தில் கூட இருக்க மாட்டேன். விருந்துகளுக்கு போகும் பழக்கம் உண்டு.

ஆனால் மற்றவர்கள் மது குடிக்க ஆரம்பித்ததும் அந்த இடத்தில் இருந்து கிளம்பி விடுவேன். சினிமா நடிகை என்பதற்காக சிலர் என்னிடம் நெருங்கவும் எல்லை மீறி நடக்கவும் முயன்றனர். அவர்களை பக்கத்தில் வரவிடவில்லை. தூரத்தில் வைத்துவிட்டேன்.’’

இவ்வாறு இலியானா கூறினார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit