அஜித்தை பற்றி அவதூறாக பேசினேனா?: கருணாஸ்

பிறப்பு : - இறப்பு :

நடிகரும், நடிகர் சங்க துணை தலைவருமான கருணாஸ், அஜித்தை பற்றி அவதூறாக பேசியதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. இதற்கு அஜித் ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனை கருணாஸ் மறுத்துள்ளார்.

இது குறித்து கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘என்னுடைய டுவிட்டர் கணக்கில் நடிகர் அஜித்தை பற்றி நான் அவதூறாக செய்திகளை கூறியதாக இன்று செய்தி வெளிவந்திருக்கிறது. இது முற்றிலும் தவறான செய்தியாகும். யாரோ விஷமிகள் என்னுடைய டுவிட்டர் கணக்கில் இப்படி ஒரு தவறான முறையற்ற செய்தியை வெளியிட்டுள்ளனர்.

ஆரம்ப காலகட்டம் முதல் இன்று வரை நான் அனைத்து நடிகர் நடிகைகளுடன் நட்பாக பழகி வந்துகொண்டிருக்கிறேன். யார் மீதும் எனக்கு தனிப்பட்ட முறையில் விரோதமோ காழ்ப்புணர்ச்சியோ கிடையாது. இந்நிலையில் இப்படி ஒரு செய்தி வந்ததை அறியும் போது மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. இது பற்றி நாளை கமிஷ்னரிடம் முறையாக புகார் அளிக்கவுள்ளேன்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit