தொடரும் இந்திய மீனவர்களின் கைது : மீண்டும் மோடிக்கு ஜெயலலிதா கடிதம்

பிறப்பு : - இறப்பு :

இலங்கை கடற்படையால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியிருக்கிறார்.

இது தொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதியிருக்கும் கடிதத்தில், ராமேஸ்வரத்திலிருந்து 2 படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்களை, இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் கைது செய்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். அதே போல், நேற்று காலை, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 24 மீனவர்கள், 5 படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற நிலையில், அவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கடற்படையினரின் தொடர் கைது நடவடிக்கைகளால் தமிழக மீனவர்கள பாதிக்கப்படுவதாகவும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாவும் முதலமைச்சர் கூறியிருக்கிறார்.

எனவே, தற்போது கைது செய்யப்பட்டுள்ள 34 மீனவர்களையும், அவர்களின் 7 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும், இலங்கைச் சிறையிலிருந்து இன்று விடுவிக்கப்படும் 86 தமிழக மீனவர்களுடன் தற்போது சிறைபிடிக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்களையும் சேர்த்து விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும் பிரதமருக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார்.

மேலும், இதுவரை விடுவிக்கப்படாமல் இருக்கும் 46 படகுகளை இலங்கை அரசு விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்துமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit