சௌதி இளவரசர் விஷயத்தில் அழுத்தம் தரப்படவில்லை

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பெய்ரூட் விமான நிலையத்தில் பெருமளவு சட்டவிரோத மருந்து பிடிபட்டது தொடர்பாக தடுத்துவைக்கப்பட்ட சௌதி இளவரசர் ஒருவர் பற்றி தனக்கு அழுத்தம் தரப்பட்டதாகக் கூறப்படுவதை லெபனான் உள்துறை அமைச்சர் மறுத்திருக்கிறார்.

லெபனான் உள்துறை அமைச்சர் நூஹாத் மச்னூக் தனது டிவிட்டர் கணக்கில் வெளியிட்ட கருத்துக்களில், இந்த சௌதி இளவரசர் விஷயத்தில் தனக்கு யாரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வரவில்லை என்றார்.

இந்த இளவரசர் உட்பட ஐந்து சௌதி அரேபியர்கள் திங்கட்கிழமை சௌதி அரேபியாவுக்கு ஒரு தனியார் விமானத்தில் ஏறவிருக்கும் சமயத்தில் இரண்டு டன்கள் அளவுக்கு கேப்டகன் என்ற ஊக்க மருந்து பொருளை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக வந்த செய்திகளை அடுத்து தடுத்து வைக்கப்பட்டனர்.

லெபனானில் உள்ள சௌதி அரேபியாவின் தூதர், அமைச்சர் மச்நூக்கை சந்தித்தது தொடர்பான படம் ஒன்றும் அவரது ட்விட்டர் கணக்கில் வெளியான இந்தக் கருத்துக்களுடன் காணப்படுகிறது

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*