சிரியா தொடர்பான பேச்சுவார்த்தையில் பங்கேற்குமாறு ஈரானிற்கு அழைப்பு.

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

சிரியாவில் இடம்பெறும் வன்முறைகளை முடிவிற்கு கொண்டு வருவது தொடர்பாக சர்வதேச பேச்சுவார்த்தை ஒன்றுக்கு வருமாறு ஈரானிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ரஸ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் தலைமையில் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையில் பங்கேற்குமாறு ஈரானிற்கு அழைப்பு விடுக்கப்படுள்ளதாக அமெரிக்க அரச துறை ஊடகப் பேச்சாளர் John Kirby தெரிவித்துள்ளார்.

அத்துடன் சிரிய மோதல்கள் தொடர்பில் Vienna வில் நாளை நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா,, ரஷ்யா, அரபு மற்றும் ஜரோப்பிய நாடுகளின் அதிகாரிகளும் பங்கேற்கவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

சிரியாவில் இடம்பெற்று வரும் மோதல்களில் ஈரான் முக்கிய பங்காற்றுகின்றது.

இந்நிலையிலேயே சிரிய மோதல்களை முடிவிற்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தையில் ஈரானிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit