சிரியாவிலுள்ள பால்மைரா பகுதியில் 3 பேரை கைது செய்த ஐ.எஸ்., அமைப்பு, பால்மைராவிலுள்ள வரலாற்று சிறப்பு மிக்க துாண்களில் அவர்களை கட்டி வைத்து, வெடி வைத்து தகர்த்தது.
யுனெஸ்கோவால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட பால்மைரா நகரை கடந்த மே மாதம் கைப்பற்றிய ஐ.எஸ்., அமைப்பு பல முக்கிய வரலாற்று சின்னங்களை தொடர்ந்து வெடிவைத்து தகர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.