ஒசாமா எங்கள் ஹீரோ: முஷாரப்

பிறப்பு : - இறப்பு :

பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் முஷாரப் அந்நாட்டு டிவி சேனல் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், ஒசாமா பின்லேடன் எங்கள் நாட்டின் கதாநாயகன் என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாக்., நாட்டை சேர்ந்த ‛துனியா’ எனும் தனியார் டிவி ஒன்றிற்கு முஷாரப் அளித்த பேட்டி : காஷ்மீரில் தாக்குதல் நடத்துவதற்காக லஷ்கர் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்தோம். காஷ்மீர் மாநிலத்திலிருந்து வந்தவர்கள் அனைவரையும் நாங்கள் கதாநாயகர்களாகவே கருதினோம். தாலிபான் பயங்கரவாதிகளுக்கு ரஷ்யர்களுக்கு எதிராக செயல்படுவதற்காக உதவி புரிந்தோம். அவர்களுக்கு ஆயுத தளவாடங்கள் வழங்கினோம்.

முஜாகிதீன் பயங்கரவாதிகளை உலகம் முழுவதும் அனுப்பினோம். ஹக்கானி, ஒசாமா பின்லேடன், ஏய்மன் அல் ஜவாஹ்ரி ஆகியோர் பாகிஸ்தான் நாட்டின் ஹீரோக்கள். இவ்வாறு முஷாரப் தனது பேட்டியில் கூறியுள்ளார். இவரது இப்பேட்டியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit