ஆப்பிரிக்கத் தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

ஆப்பிரிக்க நாடுகளின் 20 முக்கிய தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் இன்று சந்தித்துப் பேசுகிறார்.

இந்தியா-ஆப்ரிக்கா நாடுகள் இடையேயான மூன்றாவது உச்சி மாநாடு, டெல்லியில் நாளை நடைபெறவுள்ளது. இதையொட்டி, ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே, தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா, சுவாசிலாந்து அரசர் ஸ்வதி, நைஜீரிய அதிபர் முகம்மது புகாரி, கானா அதிபர் ஜான் டிபாமனி மஹாமா உட்பட 20 ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி தனித்தனியாக இன்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

இந்த இரு தரப்பு பேச்சுவார்த்தையில், வர்த்தகம், எரிசக்தி, உள்நாட்டுப் பாதுகாப்பு, ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் சீர்திருத்தம், கடல்சார் பாதுகாப்பு, பயங்கரவாதத்தை ஒடுக்குவது உள்ளிட்ட விவகாரங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறினார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit