வருமான வரி சட்டத்தை எளிமைப்படுத்த 10 பேர் குழு நியமனம்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

வருமான வரி சட்டங்களை எளிமைப்படுத்துவதற்காக 10 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு நேற்று அமைத்தது. இக்குழு, டெல்லி ஐகோர்ட்டில் பணியாற்றி ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.வி.ஈஸ்வர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 31-ந் தேதிக்குள், தனது பூர்வாங்க அறிக்கையை சமர்ப்பிக்குமாறு இக்குழுவிடம் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. அதன்மூலம், அக்குழு சிபாரிசு செய்யும் சில மாற்றங்களை பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில் அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த குழு அமைக்கப்பட்டதற்கான நோக்கம் குறித்து மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

இந்த குழு அமைக்கப்பட்டதன் முக்கிய நோக்கம், வருமான வரி சட்டங்களை எளிமைப்படுத்துவதுதான். சில உட்பிரிவுகள், இரண்டு அர்த்தங்களை கொடுப்பவையாக உள்ளன. அதனால் அவை குழப்பத்தை உருவாக்கி, வழக்குகளுக்கு வழிவகுப்பவையாக உள்ளன. அந்த குழப்பத்தை நீக்கி, வருமான வரி சட்டம் உண்மையிலேயே என்ன சொல்கிறது என்ற தெளிவை எல்லோருக்கும் உருவாக்குவதற்கான நேரம் வந்து விட்டதாக கருதுகிறோம்.

தற்போதைய உட்பிரிவுகளை எப்படி எப்படி திருத்தலாம் என்பது குறித்து இந்த குழு யோசனை அளிக்கும். இதன்மூலம், வருமான வரி சட்டங்களில் நிச்சயத்தன்மை உருவாகும். அதே சமயத்தில், வரி செலுத்துவோர் எண்ணிக்கையிலோ அல்லது வரி வசூலிலோ எந்த கணிசமான மாற்றமும் ஏற்படாது.

இந்த குழுவில், அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றிய பல்வேறு நிபுணர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் முதல்கட்ட அறிக்கையை தாக்கல் செய்த பிறகு, அதை ஆய்வு செய்வோம். அவற்றில் எவை எவை ஏற்புடையதோ, அத்தகைய உட்பிரிவுகளை எளிமைப்படுத்த முயற்சிப்போம்.

இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார்.

நீதிபதி ஆர்.வி.ஈஸ்வர் குழுவின் பதவிக்காலம், ஓராண்டு ஆகும். குழுவில், முன்னாள் சட்ட செயலாளர் வி.கே.பாசின் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

இக்குழு, மூன்று துணைக்குழுக்களையும் நியமித்துக்கொள்ளலாம். துணைக்குழுக்கள் சமர்ப்பிக்கும் வரைவு அறிக்கையை நீதிபதி ஈஸ்வர் குழு பரிசீலித்து ஒப்புதல் அளிக்கலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

நீதிபதி ஈஸ்வர் குழுவின் சிபாரிசுகள், இணையதளத்தில் வெளியிடப்பட்டு, பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும் என்று மத்திய வருவாய்த்துறை செயலாளர் ஹஸ்முக் அதியா தெரிவித்தார். அக்குழுவின் சிபாரிசுகள் அடிப்படையில், வருமான வரி சட்டம் திருத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*