ரெயிலில் பட்டாசு கொண்டு சென்றால் சிறை

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தீபாவளி பண்டிகை காலத்தில் சொந்த ஊர்களுக்கு செல்வோர் ரெயில்களில் பட்டாசுகளை கொண்டு செல்வதால் பல அசம்பாவித சம்பவங்கள் நடந்துள்ளன. இதனை தடுக்கும் வகையில் ரெயில்களில் பட்டாசுகள் கொண்டு செல்வது தடை செய்யப்பட்டு உள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் ரெயில்களில் பட்டாசு கொண்டு செல்வதை கண்காணிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு பி.விஜயகுமார் கூறியதாவது:-

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் பட்டாசுகள் கொண்டு செல்வதை கண்காணிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் ஒரு இன்ஸ்பெக்டர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், 3 போலீசார் இருப்பார்கள். இவர்கள் சாதாரண உடையிலும் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.

ரெயில்களில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்கள், பட்டாசுகள், மண்எண்ணெய், பெட்ரோல் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு செல்வது கண்டுபிடிக்கப்பட்டால் சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும். ரெயில் பயணிகளுக்கு எந்த உதவியாக இருந்தாலும் ‘1512’ என்ற 24 மணி நேர உதவி எண் மற்றும் 9962500500 (வாட்ஸ்-அப்) எண்ணும் சேவையில் உள்ளது. இதில் தொடர்புகொள்ளும் பட்சத்தில் போலீசாரின் உடனடி உதவி கிடைக்கும். சென்னை சென்டிரல், எழும்பூர், காட்பாடி, சேலம் மற்றும் கோவை உள்ளிட்ட முக்கிய ரெயில் நிலையங்களிலும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*