அவன்காட் மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலைக்குள், ஜனாதிபதி ஆணைக்குழு விஜயம்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

காலி முகத்திடலில் கண்டுபிடிக்கப்பட்ட அவன்காட் மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலைக்குள், இன்றைய தினம் பாரிய மோசடிகள், ஊழல், அரச வளங்கள், சிறப்புரிமை அதிகாரம், ஆகியவற்றை தவறாக பயன்படுத்தியமை தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு செல்லவுள்ளது.

குறித்த கப்பல் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணை மேற்கொண்ட நிலையில், தொடரும் சர்ச்சை காரணமாக ஜனாதிபதி ஆணைக்குழு இவ்விசாரணையை பொறுப்பேற்றுள்ளதோடு, இதற்கென ஐவரடங்கிய குழுவொன்றும் நியமிக்கப்பட்டது.

பொலிஸாரின் கட்டுப்பாட்டின் கீழ் குறித்த கப்பல் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸ்மா அதிபரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்கவே இன்று ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் கப்பலுக்குள் செல்லவுள்ளனர்.

கடந்த 5ஆம் திகதி செங்கடல் பகுதியிலிருந்து அவன்காட் நிறுவனத்திற்குச் சொந்தமான குறித்த ஆயுதக் கப்பல் இலங்கைக்குள் பிரவேசித்துள்ளதோடு, இதில் சுமார் 800இற்கும் அதிகமாக ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டன.
ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் காலி துறைமுகத்தில் அவன்காட் நிறுவனத்திற்கு சொந்தமான மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலையொன்று கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பான விசாரணை இடம்பெற்று வரும் நிலையில், மற்றுமொரு கப்பல் ஆயுதங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டமை சர்ச்சையை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*