கையடக்க கம்ப்யூட்டர் கங்காரூ: அமெரிக்காவில் இன்று அறிமுகம்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

com kangaru

அதிநவீன விண்டோஸ்-10 வசதியுடன் கூடிய கைபேசி அளவிலான சிறியவகை கம்ப்யூட்டரை அமெரிக்க நிறுவனமான ‘இன்ஃபோக்கஸ்’ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

124 மில்லிமீட்டர் நீளம், 80.5 மில்லிமீட்டர் அகலம், 12.9 மில்லிமீட்டர் பருமன் கொண்ட இந்த கம்ப்யூட்டருக்கு ‘கங்காரூ’ என பெயரிடப்பட்டுள்ளது. உலகிலேயே மிகச்சிறிய மேஜை கம்ப்யூட்டர் என கருதப்படும் கங்காரூவை அமெரிக்காவில் வசிப்பவர்கள் மட்டும் ஆன்லைன் மூலம் ‘Newegg.com’ இணையதளத்தில் இன்று முதல் வாங்கலாம்.

1.44GHz வேகத்தில் இயங்கும் குவாட் கோர் இண்டெல் ‘செர்ரிடெய்ல்’ அட்டாம் புராஸஸர், 2 ஜிபி LPDDR3 ரேம் உள்ளிட்ட பல்வேறு அதிநவீன தொழில்நுட்பங்களுடன் வெளியாகும் கங்காரூ, 802.11ac வைபை மற்றும் 4.0 புளூடூத் வசதியும் கொண்டது.

வெளிப்புற பேட்டரி நீங்கலாக உள்ளமைந்த மற்றொரு பேட்டரியின் மூலம் இந்த கையடக்க கம்ப்யூட்டரை சுமார் 4 மணிநேரம்வரை உயிர்ப்புடன் வைத்திருக்கலாம் என ‘இன்ஃபோக்கஸ்’ நிறுவனம் அறிவித்துள்ளது.

அடாப்ட்டர் மற்றும் பவர்க்கார்ட் நீங்கலாக வெறும் 200 கிராம் எடையேயுள்ள ‘கங்காரூ’ 99 டாலர்களுக்கு (இந்திய மதிப்புக்கு சுமார் 6,500) ரூபாய்க்கு அமெரிக்காவில் இன்று முதல் விற்பனை செய்யப்படும். வரும் நவம்பர் மாதம் முதல் மைக்ரோசாப்ட் ஸ்டோர்ஸ்களிலும் இந்த கம்ப்யூட்டர் விற்பனை செய்யப்படும் எனவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit