பாடசாலைச்சேவையில் ஈடுபடும் வாகனங்களை பதிவு செய்தல்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

யாழ் மாவட்டத்திலுள்ள பாடசாலைச்சேவையில் ஈடுபடும் அனைத்து வாகனங்களையும்(முச்சக்கரவண்டி, பஸ்வண்டி, ஹயஸ் வாகனங்கள் உட்பட) 1998ம் ஆண்டு 50ம் இலக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் சட்ட சரத்திற்கு அமைவாக பதிவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே மாவட்ட செயலக மோட்டார் போக்குவரத்துக் கிளையில் 04.11.2015 புதன்கிழமை அன்று காலை 9.30 மணிக்கு பாடசாலைச் சேவையில் ஈடுபடும் வாகனங்களின் உரிமையாளர்கள் தமது வாகனங்களைப் பதிவுக்குட்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

பதிவுக்குட்படுத்தாத வாகனங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

வாகன உரிமையாளர்கள் பின்வரும் ஆவணங்களுடன் சமூகமளிக்கவும்.
1. வாகன பதிவு புத்தகம்
2. தேசிய அடையாள அட்டை (உரிமையாளர், சாரதி, நடத்துனர்)
3. சாரதி அனுமதிப்பத்திரம் (சாரதிக்கு மட்டும்)
4. காப்புறுதி பத்திரம் மற்றும் வரிப்பத்திரம்

அரசாங்க அதிபர்
யாழ் மாவட்டம்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit