போலந்து நாடாளுமன்றத் தேர்தல்: எதிர்க்கட்சி வெற்றி

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

போலந்து நாடாளுமன்றத் தேர்தலில் முக்கிய எதிர்க்கட்சியான சட்டம் மற்றும் நீதிக்கான கட்சி வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது. அக்கட்சி 39 சதவீத வாக்குகளைப் பெற்று தனித்து ஆட்சியமைக்கத் தேவையான இடங்களைப் பெறும் என்று வாக்குப்பதிவிற்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் மூலம் தெரியவந்துள்ளது

போலந்தில் ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட்டதற்கு பின்னர் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைவது இதுவே முதல் முறை. போலந்து மக்கள் அளித்துள்ள ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டுள்ள சட்டம் மற்றும் நீதிக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் BEATA SZYDOLO, மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படும் என்றும் உறுதி கூறியுள்ளார்.

இதனிடையே ஆளுங்கட்சியின் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ள பிரதமர் EWA KOPACZ, புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்க உள்ள எதிர்க்கட்சிக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*