புனிதப் பேனா வாங்கினால் தேர்வில் வெற்றி நிச்சயமாம்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஜிம்பாப்வே நாட்டைச் சேர்ந்த ஷாம் ஹங்வே என்கிற தீர்க்கதரிசி, கிருபை இல்லம் என்கிற சர்வதேச தேவாலயத்தின் போதகராக உள்ளார். அதேவேளையில், இங்குள்ள பிரபல வணிக மையம் ஒன்றில் பேனாக்கள் விற்கும் கடையையும் அவர் நடத்தி வருகின்றார்.

இந்த கடையில் விற்கப்படும் ‘புனிதப் பேனாக்கள்’ மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற உதவும் என ஷாம் ஹங்வே உத்திரவாதம் தருகின்றார்.

சுமார் 50 முதல், ஆயிரம் ரூபாய் வரை இந்தப் புனிதப் பேனாக்கள் விற்கப்பட்டு வருகின்றன. எனினும், இவற்றில் அதிகப்பணம் கொடுத்து பேனாக்களை வாங்குவோரே கடவுளின் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளவர் என இந்தப் போதகர் கூறி வருகிறார்.

ஆகவே, மக்களும் தமது பிள்ளைகளுக்கு இந்தப் பேனாக்களை வாங்கிக் கொடுப்பதில் ஆர்வம் காட்டிவருகின்றனர். சமீபத்தில் இந்தப் பேனாவை வாங்கிய ஒரு பெண் தேர்வில் எதிர்பாராத அளவு அதிகமான மதிப்பெண்களைப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*