செல்லுபடியற்ற கடவுச்சீட்டு தொடர்பில் தாம் அறியவில்லை விமல்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

vimal weerawansa

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கடந்த வெள்ளிக்கிழமை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

அவர் செல்லுபடியற்ற கடவுச்சீட்டின் மூலம் இத்தாலிக்கு செல்ல முற்பட்ட வேளையே கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் கட்சியான தேசிய சுதந்திர முன்னணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

பாராளுமன்ற உறுப்பினர் விமரல் வீரவன்சவிற்கு கடந்த காலங்களில் காணப்பட்ட அச்சுறுத்தல் காரணமாக, பாதுகாப்பு கருதி அவரது முக்கிய ஆவணங்கள் வெவ்வேறான இடங்களில் வைக்கப்பட்டிருந்தன.

குறிப்பாக அவரது வீடு, அலுவலகம் மற்றும் நண்பர்களின் வீடுகள் என பல இடங்களில் அவரின் முக்கிய ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் அவருடைய ஆவணங்களில் நகல் எது பிரதி எது என ஏற்பட்ட குழப்ப சூழ்நிலையால் இடம்பெற்ற தவறு அது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விமான நிலைய அதிகாரிகள் அந்தக் கடவுச்சீட்டு செல்லுபடியற்றது எனக் கூறும் வரை பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச அது தொடர்பில் அறிந்திருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit