ரக்ன லங்கா குறித்து முன்னாள் கடற்படை தளபதிகளிடம் விசாரணை

பிறப்பு : - இறப்பு :

ரக்ன லங்கா பாதுகாப்பு நிறுவனத்தில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து, முன்னாள் கடற்படை தளபதிகள் மூவரிடம் விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி அட்மிரல் சோமதிலக்க திஸாநாயக்க, அட்மிரல் ஜயனாத் கொலம்பகே மற்றும் அட்மிரல் ஜயந்த பெரேரா ஆகியோரிடமே விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரக்ன லங்கா குறித்து தற்போது நடைபெற்றுவரும் விசாரணைகளுக்கு மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளும் வகையில், பாரிய ஊழல் மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவால் இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட ரக்ன லங்கா பாதுகாப்பு நிறுவனமானது துறைமுக பாதுகாப்பு உள்ளிட்ட பல சேவைகளை வழங்கிவந்தது.

எனினும் ஆட்சி மாற்றத்தின் பின்னர் குறித்த சேவைகளை இடைநிறுத்திக்கொண்டது.
இந்நிலையில் கடந்த பெப்ரவரி மாதம் ரக்ன லங்காவுக்குச் சொந்தமான ஆயுதக் களஞ்சியசாலையொன்று கொழும்பில் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து மேற்கொண்ட விசாரணைகளில்,

குறித்த நிறுவனத்தில் பாரிய மோசடிகள் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

அத்துடன் ரக்ன லங்கா நிறுவனத்தின் ஊழியர்கள் கடந்த அரசாங்கத்தால் அரசியல் செயற்பாடுகளுக்கும் பயன்படுத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit