ஜனாதிபதி தாய்லாந்திற்கு விஜயம்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தாய்லாந்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

நான்கு நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி எதிர்வரும் முதலாம் திகதி தாய்லாந்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

தாய்லாந்து பிரதமர் General Prayuth Chan-o-Cha இன் அழைப்பையேற்று அங்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி,

இலங்கை மற்றும் தாய்லாந்திற்கு இடையிலான இராஜதந்திர உறவுகளின் 60 ஆவது ஆண்டு நிறைவு விழாவிலும் கலந்து கொள்ளவுள்ளார்.

அத்துடன் தாய்லாந்து பிரதமரை சந்தித்து கலந்துரையாடும் ஜனாதிபதி இரு நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர ஒத்துழைப்புக்கள் குறித்து கலந்துரையாடவுள்ளதுடன்,

வணிக மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் மாநாட்டிலும் உரையாற்றவுள்ளார்.

மேலும் தாய்லாந்து உப பிரதமர் Somkid Jatusripitak வையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*