டெல்லி ஓட்டலில் அசின் திருமணம்

பிறப்பு : - இறப்பு :

எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானவர் அசின். கேரளாவை சேர்ந்த இவரை சூர்யாவுடன் நடித்த ‘கஜினி’ படம் முன்னணி நடிகை ஆக்கியது.

இந்தியில் தயாரான கஜினி படத்தின் மூலம் மும்பையில் பிரபலமானார். தொடர்ந்து பல இந்திப் படங்களில் நடித்தார். ஒரு திரைப்பட விழாவுக்கு சென்றபோது மும்பையை சேர்ந்த பிரபல செல்போன் நிறுவன அதிபர் ராகுல் சர்மாவை இந்தி நடிகர் அக்ஷயகுமார் அசினுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

அதன்மூலம் ராகுல்சர்மாவுக்கும், அசினுக்கும் நட்பு ஏற்பட்டது. ராகுல்சர்மா தனது காதலை அசினிடம் தெரிவித்தார். அசினும் அதை ஏற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டனர்.

திருமணம் செய்து கொள்ள விரும்பினார்கள். இருவீட்டார் சம்மதத்துடன் முறைப்படி திருமணத்தை நடத்தி வைக்க முடிவு செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து அசின்– ராகுல்சர்மா திருமணம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. அசினுக்கு ராகுல்சர்மா பல பரிசுகளையும் ரூ.6 கோடி மதிப்புள்ள வைர மோதிரத்தையும் பரிசாக வழங்கினார்.

இப்போது அசின்– ராகுல் சர்மா திருமணம் வருகிற நவம்பர் மாதம் 26–ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திருமணத்தை டெல்லியில் நடத்த ராகுல்சர்மா குடும்பத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். டெல்லியில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் இந்ததிருமணம் நடைபெறுகிறது.

அசின்–ராகுல் சர்மா திருமணத்துக்கு இரண்டு குடும்பங்களை சேர்ந்த உறவினர்கள் மட்டும் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் முன்னிலையில் திருமணம் நடக்கிறது.

மறுநாள் (27–ந்தேதி) டெல்லியில் வெஸ்ட் என்ட் கிரீன்ஸ் பகுதியில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் அசின்–ராகுல் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடை பெறுகிறது.

இங்குதான் பிரபல நடிகர் ஷாகித்கபூர்– மைரா ராஜ்புத் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள், முன்னணி நடிகர்–நடிகைகள், திரை உலக கலைஞர்கள் கலந்து கொள்கிறார்கள். இதைத் தொடர்ந்து நவம்பர் 28 அல்லது 29–ந் தேதியில் மும்பையில் அசின்–ராகுல் சர்மா வரவேற்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மும்பை வரவேற்பு தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit