பூமியை நெருங்கும் விண்கல்லில் சர்க்கரை, ஆல்கஹால்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பூமியை வேகமாக நெருங்கி வரும் விண்கல்லில் சர்க்கரை , எத்தில் ஆல்கஹால் உள்ளிட்ட 21 ஆர்கானிக் சேர்க்கைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லவ்ஜாய் என பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பாரீஸ் வானியல் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

சூரிய குடும்பத்தை நோக்கி பிரகாசமான விண்கல் வேகமாக வந்து கொண்டிருக்கிறது என 1997 ம் ஆண்டு ஹாலே-பாப் தெரிவித்தார். இதனை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் 2014ம் ஆண்டு அந்த விண்கல்லுக்கு லவ்ஜாய் என ஆராய்ச்சியாளர்கள் பெயரிட்டனர். அதனைத்தொடர்ந்து இந்த விண்கல், சூரியனின் பின்புறம் பயணித்து கொண்டிருப்பதாக ஜனவரி மாதம் கூறப்பட்டது.

சூரிய குடும்பத்தின் வெப்பமயமாதலால் இந்த விண்கல் பளபளப்பாக காணப்படுவதாகவும் கூறப்பட்டது. இதில் சர்க்கரை மற்றும் எத்தில் ஆல்ஹால் என்ற முக்கிய ஆர்கானிக் துகள்கள் க்ளைக்கால்டிைஹடு என்ற வடிவில் காணப்படுகிறது.

லவ்ஜாய் விண்கல்லில் அதிக அளவிலான ஆல்கஹால் துகள்கள் உள்ளதால் ஒரு விநாடிக்கு குறைந்தபட்சம் 500 பாட்டில்கள் ஒயினை வெளியிடும் திறன் கொண்டது என நிகோலஸ் பிவர் என்ற பாரீஸ் ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார். அதே சமயம், ஒரு விநாடிக்கு 20 டன் தண்ணீர் மற்றும் மற்ற துகள்களையும் லவ்ஜாய் வெளியிடக்கூடியது எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விண்கல் சூரியனிடம் இருந்து ஒரு குறிப்பிட்ட அளவிலான ஆற்றலை பெறுகிறது. சூரியனின் கதிரியக்க சக்தி விண்கல் துகள்களில் இருந்து குறிப்பிட்ட நுண்ணலைகளை உருவாக்குகின்றன. இந்த விண்கல்லில் இருந்து வெளியேறும் ஆர்கானிக் சேர்க்கைகளை 30 மீட்டர் தொலைநோக்கி மூலம் சர்வதேச ஆய்வு குழு கண்டுபிடித்துள்ளது.

நம்ம ஊர் அம்மணிகளுக்கு இந்த விண்கல் கிடைத்தால், அதை பொடி செய்து சர்க்கரைக்குப் பதில் காபியிலோ டீயிலோ கலந்து குடித்துக்கொள்வார்களோ?

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*