பா.ஜ.க-சிவசேனா பேனர் யுத்தம்: மோடியை ஏமாற்றுக்காரர் என்று குறிப்பிட்டதால் மகாராஷ்டிராவில் பரபரப்பு

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பிரதமர் நரேந்திர மோடியை ஏமாற்றுக்காரர் என்று குறிப்பிட்டு சிவசேனா கட்சியினர் பேனர் வைத்திருப்பது மகாராஷ்டிர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவில் பாஜகவும் சிவசேனாவும் கூட்டணி ஆட்சி நடத்தி வந்த போதிலும் பாஜகவை சிவசேனா தொடர்ந்து விமர்ச்சித்து வருகிறது. அண்மையில் பா.ஜ.க-வை சேர்ந்த குல்கர்னி மீது கருப்பு மை வீசியது, பாகிஸ்தான் பாடகர் குலாம் அலியின் நிகழ்ச்சியை பிரச்சனை செய்து ரத்து செய்ய வைத்தது, இந்திய கிரிகெட் வாரிய அலுவலகத்தை முற்றுக்கையிட்டது போன்ற சம்பவங்கள் ஆளும் பாஜகவுக்கு தர்மச் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவசேனாவின் வன்முறையை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று பாஜக கூறினாலும், அக்கட்சியின் மீது நடவடிக்கை எடுக்க அரசியல் ஆதாயம் காரணமாக தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே பிரதமர் மோடியை தாக்கி சிவசேனா கட்சியினர் மும்பையில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் மற்றும் பேனர்கள் பாஜகவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே மற்றும் வாஜ்பாய், அத்வானி, நிதின் கட்காரி, ராஜ்நாத் சிங் ஆகியோர் இருக்கும் புகைப்படங்களுடன் தாக்கரேயை மோடி தலைகுணிந்து வணங்குவது போன்ற புகைப்படம் அந்த விளம்பரங்களில் அட்சிடப்பட்டுள்ளது. அதில் ஏமாற்றுக்காரர் பாலாசாகிப்பை வணங்கும் காட்சி என்று குறிப்பி்டப்பட்டுள்ளது. இருக் கட்சிளுக்கிடையே உள்ள உரசல் அதிகரித்துள்ளதால் மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த விளம்பரங்களுக்கு தங்களுக்கும் தொடர்பில்லை என்று சிவ சேனா மறுப்பு தெரிவித்துள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*