வடக்கில் குறைந்த செலவில் வீட்டுத்திட்டம் :கைகொடுக்கும் மலேசிய அரசு

பிறப்பு : - இறப்பு :

மலேசிய அரசாங்கத்தினால் வடமாகாணத்தில் குறைந்த செலவில் வீட்டுத்திட்டங்களை அமைத்துத் தருவதற்கு தாம் தயாராக இருப்பதாக மலேசிய நாட்டின் முன்னாள் அமைச்சரும் தற்போதைய மலேசிய நாட்டின் சர்வதேச அபிவிருத்திக்கு பொறுப்பாளருமான டாடோ செரி உடமா எஸ். சாமிவேலு தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடமாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட மலேசிய அமைச்சரவை அந்தஸ்துள்ள குழுவினர் வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் வடமாகாண அமைச்சர்களை சந்தித்து கலந்துரையாடினார்கள்.

இந்த சந்திப்பில், வடமாகாணத்தில் தேவைப்படும் வீட்டுத்திட்டங்கள் மற்றும் கட்டட நிர்மான வேலைத்திட்டங்கள் குறித்து துறைசார்ந்த அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

மலேசிய அரசாங்கம் சார்பாக உட்கட்டுமானத்தினைப் பார்வையிடுவதற்கு வருகை தந்துள்ளோம். கட்டுமானத்தில் எவ்வாறு இணைந்து செயற்பட முடியும் என்பது குறித்து ஆராய்ந்துள்ளனர்.

வடமாகாணத்தில் மலேசிய அரசாங்கத்தினால் எவ்வாறான கட்டட நிர்மாண வேலைகளை செய்ய முடியும். அத்துடன், எவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியாது, போன்ற விடயங்கள் பற்றி விரிவாக ஆராய்ந்துள்ளனர்.

மேலும் குறித்த சந்திப்பில் அமைச்சர்களான கல்வி அமைச்சர் குருகுலராஜா, விவசாய அமைச்சர் ஐங்கரநேசன்,மீன்பிடி அமைச்சர் டெனீஸ்வரன், சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit