ஸ்ரீகாந்திற்கு மேக்கப் போட்ட ராய் லட்சுமி

பிறப்பு : - இறப்பு :

ஸ்ரீகாந்த்-ராய் லட்சுமி நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘சவுகார்பேட்டை’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் ஸ்ரீகாந்த், சுமன், வடிவுக்கரசி, ரேகா, இயக்குனர் வடிவுடையான், இசையமைப்பாளர் ஜான் பீட்டர் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

இதில் வடிவுக்கரசி பேசும்போது, ‘இந்த படத்தில் நான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இயக்குனர் முக்கியமான காட்சிக்கு சுடுகாட்டில் படப்பிடிப்பு நடத்தப்படும் என்று சொன்னார். நான் செட் அமைத்து படமாக்குவார்கள் என்று நினைத்தேன். ஆனால் உண்மையான சுடுகாட்டில் என்னை படுக்க வைத்து படமாக்கினார்கள்.

அதுமட்டுமல்ல, படம் எடுக்கும் இடத்திற்கு அருகில் ஒரு பிணம் எரிந்து கொண்டிருந்தது. எனக்கு மிகவும் பயமாக இருந்தது. இந்த படத்தில் என்னை ரொம்பவே வேலை வாங்கி விட்டார்கள். ரஜினி படத்தில் கூட நான் இந்தளவுக்கு வேலை பார்த்ததில்லை. உண்மையாகவே படத்தை சிறப்பாக வடிவுடையான் இயக்கியிருக்கிறார்’ என்றார்.

ஸ்ரீகாந்த் பேசும்போது, ‘நான் இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறேன். பேய் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இப்படத்தின் மூலம் நிறைவேறியிருக்கிறது. எனக்கு ஜோடியாக நடித்த ராய் லட்சுமி சிறப்பாக நடித்திருக்கிறார். இவர் ஏற்கனவே பல பேய் படங்களில் நடித்திருக்கிறார். இவருடைய அனுபவம் இந்த படத்தில் பெரிதும் உதவியாக இருந்தது. ராய் லட்சுமிதான் எனக்கு மேக்கப் போட்டுவிட்டார்’ என்றார்.

சுமன் பேசும்பொது, ‘சிவாஜி படத்திற்குப் பிறகு நல்ல கதையம்சம் கொண்ட படத்தில் நடிக்க வேண்டும் என்று நினைத்தேன். அதன்படி இந்த படம் அமைந்தது. இயக்குனர் வடிவுடையான் சிறப்பாக படத்தை இயக்கியிருக்கிறார்’ என்றார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit