திருச்சி அரசப் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ 1 லட்சம் : ஜெயலலிதா அறிவிப்பு

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

சென்னையில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற அரசப் பேருந்து திருச்சி அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த இரும்புக் கம்பிகளுடன் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதியது.

இந்த விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.படுகாயம் அடைந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

படுகாயம் அடைந்த 13 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இவர்களை நேரில் சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் போக்குவரத்து தொழித்துறை அமைச்சர் தங்கமணி ஆகியோர் காயமடைந்தவர்களுக்கான மருத்துவ உதவிகளை தமிழக அரசே ஏற்கும் என தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ 1 லட்சம் வழங்கப்படும் எனவும்,படு காயம் அடைந்தவர்களுக்கு ரூ 50 000 மும் சாதாரண காயமடைந்தவர்களுக்கு ரூ 25 000 மும் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit