மாலத்தீவு ராணுவ மந்திரி திடீர் நீக்கம்

பிறப்பு : - இறப்பு :

மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமின் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் சவுதி அரேபியாவுக்கு ஹஜ் யாத்திரை சென்றார்.

சொகுசு படகு மூலம் சென்றிருந்த அவர் பின்னர் நாடு திரும்பினார். மாலி துறைமுகத்துக்கு வந்த போது அவரது படகில் குண்டு வெடித்தது. அதில் அவரது மனைவி மற்றும் 2 பேர் காயம் அடைந்தனர். அப்துல்லா யாமின் காயமின்றி தப்பினார். அவரை கொல்வதற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால், யார் குண்டு வைத்தது என்பது இதுவரை தெரியவில்லை. சந்தேகத்தின் பேரில் பாதுகாப்பு அதிகாரிகள் 2 பேரை கைது செய்துள்ளனர்.

தற்போது அந்த நாட்டின் ராணுவ மந்திரி மூசா அலி ஜலீல் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதிபர் பாதுகாப்பில் நடந்த குளறுபடிக்கு பாதுகாப்பு மந்திரிதான் பொறுப்பு என்ற அடிப்படையில் அவர் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit