எச்.ஐ.வி. வைரஸைக் கட்டுப்படுத்த தடுப்பூசி

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

எய்ட்ஸ் நோய் எச்.ஐ.வி. வைரஸின் மூலமாகப் பரவுகின்றது என்பதைக் கடந்த 1984 ஆம் ஆண்டு கண்டறிந்த மருத்துவர்கள் குழுவில் ஒருவரான ராபர்ட் காலோ, ரத்த பரிசோதனை மூலம் இந்த வைரஸைக் கண்டறிய முடியும் என்கிற ஆராய்ச்சியிலும் முன்னிலை வகித்தார்.

தற்போது முப்பத்தோரு ஆண்டுகளுக்குப் பின்பு எச்.ஐ.வி. வைரஸுக்கு தடுப்பூசியையும் ராபர்ட் காலோவின் குழு கண்டறிந்துள்ளது. ஏற்கனவே பலமுறை குரங்குகள் மீது பரிசோதிக்கப்பட்ட இது, மனிதர்கள் மீது பயன்படுத்த விரும்புவதாக இவர் தெரிவித்துள்ளார்.

உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியளிக்கும், டி-செல்களை இந்த வைரஸ் தாக்குவதற்கு முன்னர் இந்த தடுப்பூசி பயன்படுத்தப்பட வேண்டும். மனிதர்களின் மீது இந்த முதற்கட்ட சோதனை சரியான பலனைத் தந்தால், இதற்கு அடுத்தபடியாக எச்.ஐ.வி. வைரஸின் மீது இந்த தடுப்பூசியின் தாக்கம் எவ்வாறு இருக்கும்? என்பது தொடர்பான ஆராய்ச்சியில் இறங்கப்போவதாக ராபர்ட் காலோ தெரிவித்தார்.

சுமார் பதினைந்து ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆராய்ச்சி மூலம் இந்த தடுப்பூசியைக் கண்டுபிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*