தெல்லிப்பளை புற்று நோய் வைத்தியசாலையில் சுகாதார சீர்கேடு

பிறப்பு : - இறப்பு :

தெல்லிப்பளை புற்று நோய் வைத்தியசாலையில் இருந்து அகற்றப்படும் கழிவுகள் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக அகற்றப்படாத நிலமையில் காணப்படுவதினால் பாரிய சுகாதார சீர் கேடுகளை சந்திக்க வேண்டிய அபாய நிலமை காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புற்று நோய் வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளில் ஒரு பகுதி மிகவும் பாதுகாப்பhன முறையில் அகற்றப்பட்டு மிகவும் கூடிய வெப்ப நிலையில் எரியூட்டி அழிக்கப்பட வேண்டிய வைகள் ஆகும்.

இந்த வகையில் அழிக்கப்பட வேண்டிய கழிவு பொருட்கள் மிகவும் அவதானமாக அகற்றப்பட்டு பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டுள்ள போதிலும் கடந்த ஒன்றரை வருடங்களாக அத்தகைய கழிவுகள் அகற்றப்படாத நிலமையே காணப்படுகின்றது.

இதனால் மேலும் இத்தகைய பாதுகாப்பு மிக்க கழிவுகளை தொடர்ந்து பாதுகாப்பான முறையில் வைத்திருக்க முடியாத நிலமையை கருத்தில் கொண்டு இத்தகைய கழிவு பொருட்களை அகற்ற உரிய நடவடிக்கைகளை மேற்க்கொள்ள வேண்டும் என வைத்தியசாலை வட்டாரங்கள தெரிவித்துள்ளன.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit