
இன்று சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினமாகும்.இதனையொட்டி மட்டக்களப்பு தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலை ஏற்பாடு செய்த விழிப்புலனற்றோரின் ஊர்வலம் இன்று காலை மட்டக்களப்பு கல்லடியில் இடம்பெற்றது.வெள்ளைப்பிரம்பை தாங்கிய பெரும் எண்ணிக்கையிலான விழிப்புலனற்றோர் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
தரிசனம் பாடசாலை தலைவர் முருகு.தயானந்தா தலைமையில் கல்லடி பாலத்திலிருந்து ஆரம்பமான ஊர்வலம் துளசி மண்டபத்தை வந்தடைந்தது.
கிழக்குமாகாண சுகாதார சமுக சேவைகள் அமைச்சின செயலாளர் கே.கருணாகரன் மட்டக்களப்பு பிரதேச செயலாளர் வீ.தவராஜா பாடசாலை செயலாளர் கே.ரவீந்திரன் உட்பட பல அதிகாரிகள் பாடசாலை மாணவர்கள் லயன்ஸ் கழக உறுப்பினர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
கல்லடி துளசி மண்டபத்தில் விழிப்புணர்வு செயலமர்வும் நடைபெற்றது.