ஓய்வு நிலை அதிபர்கள், ஆசிரியர்களுக்கான ஓய்வூதியத்தை உடன் வழங்க நடவடிக்கை தேவை டக்ளஸ் தேவானந்தா

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் சேவைக்கான புதிய சேவைப் பிரமாணக் குறிப்பின் பிரகாரம் அதிகரித்த கொடுப்பனவுகள் மற்றும் நிலுவைகள் தொடர்பான கோவைகளை யாழ் மாவட்ட வலயக் கல்வி அலுவலகங்கள் ஓய்வூதியத் திணைக்களத்திற்கு அனுப்பத் தவறியுள்ளதால், தற்போது ஓய்வு நிலையிலுள்ள அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவற்றைப் பெற இயலாத நிலை தோன்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இவ் விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

2008ம் வருடம் ஜூலை மாதம் 1ம் திகதி முதல் மேற்படி புதிய சேவைப் பிரமாணக் குறிப்பு நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், அதன் அடிப்படையில் அதிகரித்துள்ள கொடுப்பனவுகளும், நிலுவைகளும் 2011ம் வருடம் ஜனவரி 1ம் திகதி முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஓய்வூதியத் திணைக்களம் மேற்படி கொடுப்பனவுகள் மற்றும் நிலுவைகளை வழங்கத் தயார் நிலையில் இருப்பதாகவம், அதற்கான கோவைகள் வலயக் கல்வி அலுவலகங்களிலிருந்து கிடைக்கப் பெறாத நிலை தொடர்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ் விடயம் தொடர்பில் ஓய்வு நிலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிலர் செயலாளர் நாயகம் அவர்களிடம் முறையிட்டதற்கு இணங்க, உரிய தரப்புக்களுடன் கலந்துரையாடி, இப்பிரச்சினையை உடனடியாகத் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுப்பதாக டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*