அரசியல் கைதிகளின் பிரச்சினைகளை ஆராய ஒரு வருட காலம் தேவை என்கிறது அரசு

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

வெலிக்கடை சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளை பிரதமர் ரணில் விக்கரம சிங்கவின் உத்தரவிற்கு அமைய விசேட குழு ஒன்று சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளனர்.

இதற்கமைய நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமத்திரன், சிறைச்சாலைகள் ஆணையாளர் மற்றும் சொலிசிட்டர் ஜெனரல் சுகந்த கம்லத் ஆகியோர் சிறைச்சாலைக்கு விஜயம் செய்து கைதிகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது அரசியல் கைதிகளின் பிரச்சினைகளை மூன்று கட்டமாக ஆராயவுள்ளதுடன்;, கைதிகள் குறித்த கோப்புக்கள் மற்றும் அவர்களின் தனிப்பட்ட விடயங்கள் குறித்து இனி வரும் காலத்திலேயே தாம் பரிசீலிக்கவுள்ளமையினால்,

தமக்கு ஒரு வருடகால அவகாசம் வழங்குமாறு சொலிசிட்டர் ஜெனரல் கேட்டுக்கொண்டுள்ளனார்.

இதனால் ஒரு வருட காலத்திற்குள் அரசியல் கைதிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த அரசியல் கைதிகள் தாம் 8 முதல் 20 ஆண்டுகளுக்கு அதிகமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையினால் தம்மை பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய வேண்டும் எனவும்,

இன்னும் ஒரு வருடகால அவகாசம் வழங்க முடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் தமது விடுதலை குறித்து ஜனாதிபதி உறுதி மொழி வழங்கும் பட்சத்திலேயே தாம் உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுவதாகவும்,

இல்லாவிட்டால் மரணத்தை தழுவுவதை விட தமக்கு வேறு வழியில்லையெனவும் தெரிவித்துள்ளனர்.

இதற்கு பதிலளித்த நீதியமைச்சர், சட்டத்துறை சார்ந்த தம்மால் சட்ட ரீதியிலான விடயங்களை மாத்திரமே முன்வைக்க முடியும் எனவும்,

ஜனாதிபதிக்கே கொள்கை ரீதியில் விடுதலை செய்யும் அதிகாரம் காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கைதிகளின் கோரிக்கைகளை ஜனாதிபதியிடம் முன்வைப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

இதனையடுத்த கைதிகள் தொடர்ந்தும் உண்ணாவிரத போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit