இந்திய கடற்பரப்பின் ஊடாக இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவிற்கு புகலிடம்

பிறப்பு : - இறப்பு :

இந்திய கடற்பரப்பின் ஊடாக இலங்கையர்கள் சட்டவிரோதமான முறையில் படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்கு புகலிடம் கோருவதாக அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்தம் மற்றும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்தும் பொருளாதார நன்மைகளை கருத்திற் கொண்டு மேற்குலக நாடுகளில் புகலிடம் கோரி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய இந்த ஆண்டின் கடந்த ஒகஸ்ட் மாதம் 31ம் திகதி வரையான காலப்பகுதியில் 2028 புகலிடக் கோரிக்கையாளர்களை அவுஸ்திரேலிய அதிகாரிகள் கைது செய்துள்ளதாகவும்,

இதில் 171 பேர் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் எனவும் குறிப்பிடப்படுகிறது.

அத்துடன் இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களில் ஒன்பது பெண்களும் ஒன்பது சிறுவர்களும்; அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, 2008ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் ஆபத்தான கடல் வழிப் பயணத்தில் 1200 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit