இலங்கையில் மத வன்முறைகள் குறைவு

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

இலங்கையில் மத ரீதியான வன்முறைகள் குறைவடைந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இலங்கையில் பல ஆண்டுகளாக மத ரீதியான வன்முறைகள் இடம்பெற்ற நிலையில்,

புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் மத ரீதியிலான வன்முறைகள் குறைவடைந்துள்ளதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் சர்வதேச மத சுதந்திரப் பிரிவு தூதுவர் டேவிட் சமர்ஸ்டின் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மத சுதந்திரம் தொடர்பிலான அறிக்கையொன்றை அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜொன் கெரி சமர்ப்பித்துள்ளார்.

இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள், இந்து ஆலயங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை தொடர்ந்தும் நீடித்து வருவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சில சந்தர்ப்பங்களில் அரச அதிகாரிகளும் பொலிஸாரும் தாக்குதல் மேற்கொள்ளும் சிங்கள அமைப்புக்களுக்கு ஆதரவாக செயற்பட்டு வரும் நிலைமை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தெற்கில் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதங்கள் மீது அதிகளவு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாகத் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத வழிபாடுகளில் ஈடுபடும் தரப்பினர் மீது சட்டவிரோத ஒன்று கூடல் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுபல சேனா இயக்கம் தொடர்ச்சியாக சிறுபான்மை சமூகங்கள் மீது கடுமையான அழுத்தங்களை பிரயோகித்து வருவதாகவும் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit