ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம்

பிறப்பு : - இறப்பு :

ஜரோப்பிய நாடுகளுக்கான இலங்கையின் மீன் ஏற்றுமதி தடைகுறித்து ஆராயும் வகையில் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்பிடப்படுகிறது.

இதற்கமைய ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் எதிர்வரும் வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும்,

அவர்களுடன் இது குறித்து இறுதிக்கட்ட சுற்றுப் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் வெளிவிவகாரப் பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இலங்கையின் மீன் ஏற்றுமதிக்கான தடை உத்தரவை ஐரோப்பிய ஒன்றியம் பிறப்பித்திருந்தது.

இந்தத் தடையை நீக்குவதற்கு புதிய அரசாங்கம் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit