900 கிலோ எடை கொண்ட பூசணியை விளைவித்து விவசாயி சாதனை

பிறப்பு : - இறப்பு :

அமெரிக்காவின் சான்ஃபிரான்சிஸ்கோ மாகாணத்தில், ஆண்டுதோறும் அதிக எடைகொண்ட பூசணிக்காய்களைத் தேர்வு செய்யும் விழா நடைபெற்று வருகிறது.

இதற்காக, பல்வேறு மாகாணங்களைச் சேர்ந்த விவசாயிகள், பெரிய பூசணிக்காய்களை விளைவித்து இப்போட்டியில் பங்கேற்கின்றனர். இந்த ஆண்டு நடைபெற்ற விழாவில், Oregon மாகாணத்தைச் சேர்ந்த Steve Daletas என்ற விவசாயியும், அவரது மனைவியும் சுமார் 900 கிலோ எடைகொண்ட பூசணிக்காயை விளைவித்து சாதனை படைத்துள்ளனர்.

இந்த பூசணிக்காயே, அதிக எடைகொண்டதாக இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதிக எடைகொண்ட பூசணிக்காயை விளைவித்த விவசாயிக்கு 11 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit