
மலேசியாவில் உள்ள யுவான்யாங்கிலிருந்து சீனாவின் யுனான் நகரத்திற்கு பயணம் மேற்கொண்ட பிரபல மலேசிய புகைப்படக் கலைஞரான அலெக்ஸ் கோ சன் சியோங், சீனாவின் இயற்கை எழில் கொஞ்சும் விளை நிலங்களை, ஆரஞ்சு, ஊதா, மஞ்சள், நீலம் என்று இயற்கையான ஒளியிலேயே படம்பிடித்துள்ளார்.
விளை நிலத்தில் வேலை பார்க்கும் விவசாயியைக் கூட தனது லேண்ட்ஸ்கேப் புகைப்படத்தில் அழகாக பதிவு செய்துள்ளார்.
இதில் இன்னொரு விசேஷமும் இருக்கிறது. இந்த புகைபடங்கள் அனைத்துமே மிகச்சரியாக சூரியன் மறைவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக எடுக்கப்பட்டவை என்பதுதான் அது.