அதிரவைத்த வெள்ளைவான் கடத்தல்கள் – வெளியாகும் புதிய தகவல்கள்..!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கடந்த காலங்களில் முன்னாள் பாதுகாப்பு செயலாளரினால் தெற்கில் செயற்படுத்திய வெள்ளை வான் கடத்தலுக்காக, 3 குழுக்கள் செயற்பட்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த மூன்று குழுக்களில் முதல் குழு, கடத்தி செல்லப்படும் நபர் தொடர்பில் தகவல் சேகரித்தல் மற்றும் புலனாய்வு செய்து கடத்தி செல்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தல்.

அதற்காக பாதுகாப்பு புலனாய்வு பிரிவு உறுப்பினர்கள் மற்றும் விடுதலை புலிகளில் இருந்து வெளியேறிய உறுப்பினர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இரண்டாவது குழு கடத்தலை மேற்கொள்கின்ற குழுவாகும். வெள்ளை வான்களில் வரும் இந்தக் குழுக்குவுக்கு அதிகமான சந்தர்ப்பங்களில் இரண்டு குழுக்கள் பயன்படுத்தப்படும்.

அதில் ஒன்று கருணா அம்மானின் கொலைகார குழுவாகும். ஏனையவர்கள் அவ்வப்போது மாற்றப்படுவார்கள்.

விசேட அதிரடிப்படையில் கோத்தபாயவின் சார்பு அணி மற்றும் பாதுகாப்பு படைகளில் தெரிவு செய்யப்பட்ட ஒரு குழுவும் இதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.

உதாரணமாக கொழும்பு கோட்டையில் வைத்து செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள் கருணா அம்மானின் கொலைகார குழுவினால் கடத்தப்பட்டுள்ள நிலையில், ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கோத்தபாய தரப்பு குழுவினரால் கடத்தப்பட்டுள்ளார்.

மூன்றாவது குழு அற்புதமான குழுவாகும். அவர்கள் கடத்தி செல்லப்படுபவர்களினால் விட்டு செல்லப்படும் சாட்சிகளை அழிக்கும் குழுவாகும்.

அவர்கள் கோத்தபாயவின் புலனாய்வு பிரிவுகளாகும் அத்துடன் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் அந்தப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் போல் நடித்துள்ளனர்.

கடத்தல் நடவடிக்கைகளை கண்காணித்து வந்த இவர்கள் தற்செயலாக கடத்தலின் போது உயிர் பிழைத்தவர்கள் விட்டு சென்ற எதனையும், பொலிஸாருக்கு வழங்கும் சிவல் அமைப்பினர் அல்லது பொலிஸ் அதிகாரிகள் போன்று நடித்து சாட்சிகளை கொண்டு சென்று அழித்து விடும் பணியில் ஈடுபட்டிருந்த குழுவாகும். இதனால் பல கடத்தல் தொடர்பில் எவ்வித சாட்சிகளும் மீதமாகவில்லை.

எப்படியிருப்பினும் கடத்தி சென்ற நபர்களை கொலை செய்தல் மற்றும் உடல்களை அழிக்கும் நடவடிக்கையினை இரண்டாவது குழுவான கடத்தல் குழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிறப்பு அதிரடிப்படையினரை ஈடுபடுத்தி மேற்கொள்ளப்பட்ட கடத்தல் மற்றும் கொலைகளுக்கு பின்னர் சடலங்கள் கொழும்புக்கு தொலைவில் அமைந்துள்ள காட்டு பிரதேசம் ஒன்றில் தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கருணா அம்மானின் குழுவினால் கடத்தப்பட்ட நபர்களின் சடலங்களின் தலை, வயிறு பகுதிகள் கடலில் மூழ்கடிக்கும் நடவடிக்கைகள் கருணா அம்மானின் குழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்கள் இராணுவத்தில் உயர் அதிகாரங்கள் கொண்டிருந்தவர்களாகும்.

கிடைக்கப்பட்டுள்ள தகவல்களுக்கமைய தெற்கில் மேற்கொள்ளப்பட்ட வெள்ளை வான் கடத்தல் மற்றும் கொலை தொடர்பில் முக்கிய பல விடயங்கள் வெளியாகியுள்ள நிலையில் விரைவில் கோத்தபாய ராஜபக்சவின் வலது கை என அழைக்கப்படும் நபர் கைது செய்யப்படவுள்ளதாக நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*