அக அழகைப் பற்றி கவிதை சொல்லும் 92 வயது மூதாட்டி: வீடியோ இணைப்பு

பிறப்பு : - இறப்பு :

அக அழகைப் பற்றி வாண்டா பி. கோயின்ஸ் (92) என்கிற மூதாட்டி ஒரு அழகான கவிதை எழுதியுள்ளார். இவரைக் கவனித்துக்கொள்ளும் கேத்தரின் என்பவர் வாண்டா எழுதிய கவிதையை அவரே வாசிக்கச் செய்து தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

வாண்டா எழுதிய ‘த கிப்ட் ராப் மற்றும் த ஜுவல்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. அந்தக் கவிதை இந்த வயதான காலத்தில் கண்ணாடியைப் பார்த்து தனக்கு ஏன் இந்த முதிர்ச்சியானத் தோற்றம் வந்தது எனக் கேள்வியெழுப்புவதாக தொடங்குகின்றது.

கண்ணாடி இந்தக் கேள்விக்கு, உலகில் இன்னொருவரைப் போல இல்லாத நீ, வெளிப்புற கிப்ட் கவரைப் பார்க்காதே! உள்ளுக்குள் இருக்கும் மதிப்புமிக்க அணிகலனைப் பார்! எனவும், அக அழகைக் காட்டிலும் உள்ளுக்குள் இருக்கும் கருணை, புத்திகூர்மை, அனுபவ அறிவு மற்றும் கடவுள் பக்தி போன்றவற்றை கவனி! என அழகாக கூறுகிறார்!

முதுமை எய்துவதைப் பற்றி முதிர்ச்சியடைந்த வாண்டாவிடம் கேட்டுத் தெரிந்துகொள்வோம்.. இந்த வீடியோ இணைப்பின் மூலமாக..,

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit