குழந்தைக்காக தவம் கிடக்கும் தாயின் வலியை உணர்த்தும் புகைப்படம்

பிறப்பு : - இறப்பு :

தனக்கேற்ற கணவருக்காக காத்திருந்து கொஞ்சம் தாமதமாய் திருமணம் செய்துகொண்ட ஏஞ்சலா என்கிற பெண்மணி, இயற்கையாக கருத்தரிக்க முடியாமல் போனதால், பெரும் அவதிக்குள்ளானார்.

பின்னர் அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தின் செயிண்ட் லூயிஸ் நகரில் வசித்து வரும் இவர் அருகிலுள்ள ‘ஷெர் பெர்டிலிட்டி’- மருத்துவமனையை அணுகினார். தனக்கென ஒரு குழந்தையைத் தானே பெற்றுக்கொள்ள வேண்டும் என ஆசைபட்ட ஏஞ்சலா இதற்காக ஹார்மோன் ஊசிகளை மருத்துவரின் அறிவுரைப்படி தினசரி போட்டுக்கொண்டார்.

சுமார், பதினெட்டு மாதங்கள் ஊசியின் வலி மட்டுமல்லாது, மன வலியையும் பொறுத்துக்கொண்ட அவரது பொறுமைக்குப் பரிசாக ஒரு பெண் குழந்தையை ஐ.வி.எஃப். (IVF- தாயின் உடலிலிருந்து அண்டத்தையும், தந்தையிடமிருந்து விந்தணுவையும் வெளியில் எடுத்து, அவற்றை இணைத்து கருத்தரிக்க வைக்கும் முறையில்) முறைப்படி பெற்றெடுத்தார்.

தனது வலிகளுக்கான பரிசாக மகளைக் கருதும் ஏஞ்சலா, உலகுக்கு அவளது அருமையை உணர்த்தும் விதமாக ஊசிகளுக்கு நடுவே மகள் இருப்பதுபோன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டார்!

எந்நாளும் தாயின் பாசத்துக்கு ஈடு இணையே இல்லை!

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit