மாடலாக சமூக தளத்தில் வலம்வரும் குட்டி அழகி

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஒரு பதினெட்டு மாதக் குழந்தைக்கு, சொந்தமாக பத்தாயிரம் பவுண்ட்கள் (இந்திய மதிப்பில் சுமார் பத்து லட்சம்) மதிப்பிலான ஆடைகள் இருக்கிறது என்றால் நம்புவீர்களா?

அவயா ஹியூகோ என்கிற ஒன்றரை வயதுக் குழந்தை அணிவதற்கான உடைகளை சுமார் ஐநூறு ஆடை வடிவமைப்பாளர்களால் ஆசையாக உருவாக்கப்படுகின்றன. இவளுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும், பெரிய நிறுவனங்கள் இலவசமாக வழங்கி வருகின்றன.

பேசத் தொடங்கும் முன்னரே அவயாவின் இன்ஸ்டகிராம் பக்கத்தில் அறுபதாயிரம் பேர் இவரை பின் தொடர்கின்றனர். இதற்கெல்லாம் காரணம் அவயாவின் அம்மா கார்லி ஆஸ்டன்! எப்போதுமே சிரித்த முகத்துடன் இருக்கும் அவயாவுக்கு புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்க மிகவும் பிடிக்குமாம்.

ஆகவே, மூன்று மாதக் குழந்தையாக இருந்ததிலிருந்து, அவளை அலங்கரித்து எடுக்கும் புகைப்படங்களை அம்மா கார்லி இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றார். இதனை பெரிய நிறுவனங்களும் பயன்படுத்திக் கொண்டு அவர்களது மாடலாக இந்த உடைகளை வழங்கி அவயாவை அணியவைத்து அழகு பார்க்கின்றனர்.

‘எல்லா குழந்தைகளும், அவரவர் அம்மாவுக்கு அழகு எனத் தோன்றுவது வழக்கம்தான்! ஆனால், என் குழந்தை அனைவருக்குமே அழகாகத் தெரிகிறாள்’ என பெருமையாகக் கூறுகிறார் கார்லே. அவயாவுக்கு இப்போது ஆறு மாதத் தங்கை இருக்கின்றாள், அவளும் அக்காவைப் பின்தொடர்வாளா? என இன்ஸ்டகிராம் ரசிகர்கள் ஆவலாகக் காத்திருக்கின்றனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*