நாளை யேர்மனியில் நடைபெறும் ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாகாநாட்டு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி:

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தினால் நாளை நிகழவிருக்கும் 10.10.2015 சனிக்கிழமை றுரிpநச ர்யடடந ர்ரநெகநடனளவச.63டி 42285 றுரிpநசவயட புநசஅயலெ இல் “ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாடு „ என்னும் கருப்பொருளில் மாபெரும் எழுச்சிமாநாடு ஒன்றினையும் தொடர்ந்து செந்தமிழ்க்கலைமாலை நிகழ்வும் 2015 யேர்மனியில் நடைபெற உள்ளது. உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க ஏற்பாட்டுக் குழுத்தலைவரும் அகிலத்தலைவருமான செந்தமிழ்க்காவலர் வி.எஸ்.துரைராஜா இயக்க செயலாளர் நாயகம் துரைகணேசலிங்கம் மாநாட்டுக் குழுத்தலைவர் இ.இராஜசு10ரியர் மாநாட்டுக் குழுச் செயலாளர் கி.யேம்ஸ் அல்ஸ்ரன் ஆகியோர் ஊடகங்களுக்கு அறியத் தந்துள்ளனர்.

கனடாவைத் தலைமைப் பீடமாகக் கொண்டு இயங்கும் இவ்இயக்கம் பலநாடுகளில் கிளை பரப்பி பதிவு பெற்றுள்ளது உலகளாவிய மாநாடுகள் மூலம் இவ் இயக்கம் தமிழர்களின் கலை பண்பாடுகளை ஊக்குவிப்பதுடன் தமிழ்மொழிக்கல்வி தமிழர் வரலாறு ஆவண சேமிப்பு தூயதமிழ் வழக்கு தமிழ்ச் செம்மொழி உருவாக்கம் உலகத் தமிழர்களிடையே ஒற்றுமை பேணல் முதலான விடயங்களில் பல சாதனைகளை நிலைநாட்டியுள்ளது. இது எமது மக்களின் வாழ்வியலில் இனத்தின் எதிர்காலத்தில் எமது சந்ததிகளின் பயணத்தில் தன் சீரிய பார்வைகளை விரித்து அதற்கான பணித்திட்டங்களை உருவாக்கி விரிவாக்கி தொடர்ந்து செயற்படும் ஓர் அமைப்பாக விளங்குவதை எமது மக்கள் அறிவார்கள். இம்மாநாட்டில் ஈழத்தில் வாழும் தமிழ்மக்களின் அமைதியான வாழ்வு மொழி பண்பாடு புனர்வாழ்வு வாழ்வுரிமை போன்ற விடயங்கள் ஆராயப்படவுள்ளன. காலை 10.00மணிக்கு இயக்கத்தின் அனைத்தலகப் பேரவைக் கூட்டம் அகில துணைத்தலைவர் பண்பாட்டு க்காவலர் தமிழ்த்திரு.சுப்பிரமணியம் தியாகலிங்கம் (நெடுந்தீவு) தலைமையில் இடம்பெறும்.

இதனைத்தொடர்ந்து நடைபெறும் மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக இலங்கையில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர்களான மாண்புமிகு மாவை சோ சேனாதிராஜா அவர்கள் சிவஞானம் சிறீதரன் அவர்கள் சீனித்தம்பி யோகேஸ்வரன் அவர்கள் வேலுசாமி ராதாகிருஸ்ணன் அவர்கள் மற்றும் தமிழகத்தில் இருந்து இந்திய கம்யூனிற் கட்சியின் தமிழ்மாநில பொதச் செயலாளர் சி.மகேந்திரன் அவர்களும் மற்றும் உலகநாடுகளில் இருந்து உலகளாவிய பேராளர்களும் ஊடகவியலாளர்கள் மற்றும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க உலகளாவிய பேராளர்கள் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.

நாதஸ்வர வித்துவான் மதுரகானமணி என் பாலமுரளி தவில் ஞானச்சுடரொளி கே.பி செல்வநாயகம் குழுவினர் வழங்கும் மங்கள இசை ஐரோப்பிய புகழ்பெற்ற நடன ஆசிரியைகளின் மாணவர்களின் எழுச்சி நடனம் பரதமாலை சங்கீத கலாயோதி திவாகர் சிவநேசன் குழுவினர் வழங்கும் தமிழிசைகச்சேரி யேர்மனியில் புகழ் பெற்ற யங்ஸ்ரார் இசைக்குழுவினரின் எழுச்சிக் கானங்கள் இன்னும்பல கலை நிகழ்வுகள் இடம் பெறும் இந்நிகழ்வி;ல் நிகழ்ச்சி அறிவிப்பாளராக இலங்கை மற்றும் ஐரேப்பிய வானொலி தொலைக்காட்சி புகழ் மதுரக்குரலோன் என்.ரி.ஜெகன் அவர்கள் கலந்து கொள்கிறார்கள். எனவே இம்மாநாடு சிறப்புற அதில்கலந்து சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டுநிற்கின்றோம்.

இவ்வாறு உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புகள் – Mr.Rajasooriyar mobil: 0049-15211317329 Home: 0049- 201 -2486284 E.Mail: rrajsooriyar@yahoo.com
Mr.ThuraiGanesalingam Home:0049-5971-14258 E.Mail: imtc1974@yahoo.com
Mr.G.James Alston E.mail alston@hotmail.de
Home: 0049-521-160823 Mobil: 0049-17641816839 Mr.Ambikaipakan Sivakaran Mobil: 0049-15233896024

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*