மாலத்தீவு அதிபரை கொல்ல முயற்சி: பாதுகாப்பு அதிகாரிகள் 2 பேர் கைது

பிறப்பு : - இறப்பு :

மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமின் தனது மனைவி பாத்திமா மற்றும் குடும்பத்தினருடன் சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு ஹஜ் யாத்திரை சென்றிருந்தார்.

மாலத்தீவில் இருந்து சொகுசு படகில் அவர் சென்றார். பயணத்தை முடித்துக் கொண்டு கடந்த 28–ந் தேதி நாடு திரும்பினார். மாலத்தீவு துறைமுகத்தில் இருந்து இறங்கிய போது அவரது படகில் குண்டு வெடித்தது. இதில், அப்துல் யாமின் மனைவி பாத்திமா உள்ளிட்ட 3 பேர் காயம் அடைந்தனர். அப்துல்லா யாமின் உயிர் தப்பினார்.

முதலில் படகில் உள்ள எந்திர கோளாறினால் வெடி விபத்து ஏற்பட்டதாக கருதப்பட்டது. ஆனால், வெடிகுண்டு வைக்கப்பட்டு இருந்தது பின்னர் உறுதி செய்யப்பட்டது. ஆனால், வெடிகுண்டு வைத்தவர்கள் யார் என்று இதுவரை தெரியவில்லை.

இதுபற்றி மாலத்தீவு, சவுதி அரேபியா, இலங்கை, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் விசாரித்து வருகின்றன.

இந்த நிலையில் அதிபரின் பாதுகாப்பு அதிகாரிகள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். குண்டு  வெடிப்பு பின்னணியில் அவர்கள் இருந்ததாக தெரிய வந்துள்ளது. அவர்கள் பற்றிய மற்ற விவரங்கள் எதையும் வெளியிடவில்லை.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit